/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் கொடி ஊர்வலம்
/
முதுகுளத்துாரில் கொடி ஊர்வலம்
ADDED : மார் 13, 2026 07:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
டி.எஸ்.பி., சண்முகம், கமாண்டர் கில்லே மிஸ்ரா முன்னிலை வகித்தனர். மத்திய ஆயுதப்படையினர் 60 பேர், தமிழக ஆயுதப்படை போலீசார், உள்ளூர் போலீசார் என 100 பேர் கலந்து கொண்டனர். போலீஸ் ஸ்டேஷனில் துவங்கி பஜார், பஸ் ஸ்டாண்ட் வழியாக தாலுகா அலுவலகம் வரை ஊர்வலம் சென்றனர். இன்ஸ்பெக்டர்கள் இளையராஜா, சந்திரசேகர், ராஜேந்திரன், ஜெகதீசன், துரைப்பாண்டியன், ஜக்குபாய் பங்கேற்றனர்.

