ADDED : மார் 31, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ். மங்கலம்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் சோழந்துார், திருப்பாலைக்குடி பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடந்தது. திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் நடந்த 40 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 63 பேர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பல்வேறு தெருக்கள் வழியாக சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
