/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டி பெருமாள் கோயிலில் கொடிமரம் கும்பாபிேஷகம்
/
தொண்டி பெருமாள் கோயிலில் கொடிமரம் கும்பாபிேஷகம்
ADDED : ஜன 22, 2024 04:49 AM

தொண்டி: தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயில் கொடிமரத்திற்கு கும்பாபிேஷகம் நடந்தது.
தொண்டியில் மன்னர்கள் காலத்தில் கட்டபட்ட பழமை வாய்ந்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உந்திபூத்த பெருமாள் கோயில் உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் இங்கு அருள்பாலிக்கிறார். ராமானுஜர் வழிபட்ட தலம்.
இங்கு கருடர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ஆதிேஷசன், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. புரட்டாசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். ஹிந்து பரிபாலன சபை சார்பில் 33 அடி உயரத்தில் கொடி மரம் அமைக்கும் பணி ஓராண்டுக்கு முன்பு துவங்கியது. தேக்கு மரத்தால் அமைக்கும் பணிகள் முடிந்து நேற்று முன்தினம் கொடிமரம் அமைக்கப்பட்டது. நேற்று காலை 10:30 மணிக்கு பட்டாச்சாரியார்கள் யாக பூஜை மற்றும் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதனை தொடர்ந்து கருட பகவான் வானில் வட்டமிட கொடிமரத்திற்கு கும்பாபிேஷகம் நடந்தது.
ஹிந்து பரிபாலன சபை பக்தர்கள் மற்றும் ஹிந்து அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.