நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி சந்தைப்பேட்டை தெருவில் காளியம்மன் கோயிலில் கொடிமரம் நடும் விழா நடந்தது. மூலவர் காளியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம் தீபாரதனை நடந்தது.
கொடி மரத்திற்கு சிறப்புபூஜை, வழிபாடு செய்தபின் நடப்பட்டது. மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பிப். 2ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் ஏராளமானோர் காப்புகட்டினர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர்.