/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புயலில் உயரிழந்தோர் நினைவாக தனுஷ்கோடி கடலில் மலரஞ்சலி
/
புயலில் உயரிழந்தோர் நினைவாக தனுஷ்கோடி கடலில் மலரஞ்சலி
புயலில் உயரிழந்தோர் நினைவாக தனுஷ்கோடி கடலில் மலரஞ்சலி
புயலில் உயரிழந்தோர் நினைவாக தனுஷ்கோடி கடலில் மலரஞ்சலி
ADDED : டிச 25, 2024 03:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:தனுஷ்கோடியில் 1964ல் ஏற்பட்ட புயலில் உயிரிழந்தோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி தனுஷ்கோடி கடலில் மீனவர்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
1964 டிச..22 இரவு ஏற்பட்ட புயல் தனுஷ்கோடி நகரை உருகுலையச் செய்தது. இதில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உயிரிழந்தனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி தனுஷ்கோடியில் உள்ள பாரம்பரிய மீனவர்கள் சங்கம் சார்பில் நேற்று தனுஷ்கோடியில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.
இதனை தொடர்ந்து மீனவர்கள் கடலில் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். இதில் தனுஷ்கோடியை சேர்ந்த ஏராளமான மீனவ பெண்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.