/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா மார்ச் 17ல் பங்குனி விழா துவக்கம்

ADDED : மார் 02, 2024 11:42 PM

பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. மார்ச் 17ல் பங்குனி விழா துவங்க உள்ளது.
முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் பல்வேறு மண்டகப்படிகள்அமைக்கப்பட்டு பூக்களைதட்டுகளில் பரப்பி வைத்திருந்தனர். பின்னர் மேள தாளம் முழங்க பக்தர்கள் வண்ண பூக்களை கோயிலில் சேர்த்தனர்.
இரண்டு டன்னுக்கு மேல் இருந்த மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, பச்சை என பூக்கள் வரிசையாக அம்மனுக்கு அபிஷேகம் செய்து சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் முகம் மட்டும் தெரியும் வகையில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்தனர்.
நேற்று காலை 10:30 மணிக்கு தீபாராதனையில் தரிசனம் செய்த பக்தர்களுக்கும் பூக்கள் பிரசாதமாக வழங்கினர்.
மார்ச் 17ல் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. மார்ச் 20ல் வண்டி மாகாளி உற்ஸவம், மார்ச் 25ல் அக்னி சட்டி ஊர்வலம், தேரில் அம்மன் நான்கு மாட வீதிகளில் வலம், மார்ச் 27ல் பால்குட நேர்த்திகடன் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்கின்றனர்.