/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் ரேஷன் கடையில் உணவுக்கழக அதிகாரிகள் ஆய்வு
/
ராமநாதபுரம் ரேஷன் கடையில் உணவுக்கழக அதிகாரிகள் ஆய்வு
ராமநாதபுரம் ரேஷன் கடையில் உணவுக்கழக அதிகாரிகள் ஆய்வு
ராமநாதபுரம் ரேஷன் கடையில் உணவுக்கழக அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 15, 2025 10:21 PM
ராமநாதபுரம்; மத்திய அரசின் இந்திய உணவுக்கழக அதிகாரிகள் ராமநாதபுரம் களரி நேரடி கொள்முதல் நிலையம், முதுகுளத்துார் ரேஷன்கடைகளில் ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொது விநியோகத்திட்டம், நேரடிக் கொள்முதல் நிலையம், இந்திய உணவுக் கழகம் மற்றும் விவசாயிகள் நேரடிக் கொள்முதல் செய்யும் விவரங்கள், அதன் தொடர்புள்ள பொருட்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மத்திய குழுவின் தலைவர் ஜோஸ்னா குப்தா, துணைச் செயலாளர் இந்திய உணவுக்கழகம் பிரிவு அலுவலர் மனஸ்குமார், இந்திய உணவுக் கழக பொது மேலாளர் பங்கஜ்குமார் சவுத்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக களரி கிராமத்தில் அமைந்துள்ள நேரடி கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு விவசாயிகளிடம் தரம் குறித்து மத்திய குழுவினர் கேட்டறிந்தனர். முதுகுளத்துாார் அருகே வெண்ணீர் வாய்க்கால், சாம்பக்குளம் ஆகிய இடங்களில் உள்ள ரேஷன்கடையில் பொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமாறன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சதீஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) பாஸ்கரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.