ADDED : ஆக 17, 2025 12:22 AM
ராமநாதபுரம்:உணவு டெலிவரி செய்ய சென்ற ஊழியரின் டூவீலர் மீது மற்றொரு டூவீலர் மோதியதில் ஊழியர் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் பேராவூரை சேர்ந்தவர் மணிவண்ணன் 36. இவர் உணவு டெலிவரி வேலை செய்து வந்தார். வழக்கம் போல் நேற்று காலை பாரதி நகர் அருகே உணவு டெலிவரி செய்ய சென்று உள்ளார்.
அப்போது சாலையில் திரும்ப முயன்ற போது எதிர்புறம் கார் வந்ததால் காத்திருந்தார். கார் சென்றவுடன் திரும்பிய போது கார் பின்னால் வேகமாக வந்த டூவீலர் மோதியதில் மணி வண்ணன் துாக்கி வீசப் பட்டார்.
உடனே அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மோதிய டூவீலரில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது 17, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.