/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு பயன்பாட்டிற்கு வர வேண்டும்
/
ஊராட்சிகளில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு பயன்பாட்டிற்கு வர வேண்டும்
ஊராட்சிகளில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு பயன்பாட்டிற்கு வர வேண்டும்
ஊராட்சிகளில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு பயன்பாட்டிற்கு வர வேண்டும்
ADDED : ஜன 30, 2025 05:12 AM

திருப்புல்லாணி: ஊராட்சிகளில் பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கும் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2022, 2023ம் ஆண்டுகளில் நெல், மிளகாய், மல்லி மற்றும் சிறுதானியங்களை காய வைப்பதற்கான உலர் களம் கட்டப்பட்டுள்ளது.
தற்போது நெல் அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் உலர் களங்களை முறையாக பயன்படுத்தாத நிலை பல ஊராட்சிகளில் தொடர்கிறது. கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:
ரூ.3 லட்சம் முதல் 5 லட்சத்தில் உலர் களம் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை உரிய முறையில் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவிக்க ஊராட்சிகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே போன்று நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள் சேமிப்பு கிடங்கு ஒரு சில ஊராட்சிகளில் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் எந்த பயன்பாடும் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
எனவே அரசு நிதியை வீணடிப்பதை தவிர்க்கவும், விவசாயிகளுக்கு உரிய முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திருப்புல்லாணி யூனியன் நிர்வாகம் மற்றும் வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.