/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை சிறையில் உணவு படுமோசம் விடுதலையான மீனவர் வேதனை
/
இலங்கை சிறையில் உணவு படுமோசம் விடுதலையான மீனவர் வேதனை
இலங்கை சிறையில் உணவு படுமோசம் விடுதலையான மீனவர் வேதனை
இலங்கை சிறையில் உணவு படுமோசம் விடுதலையான மீனவர் வேதனை
ADDED : நவ 23, 2024 07:41 AM

ராமேஸ்வரம் : இலங்கைச் சிறையில் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு, குடிநீர் படுமோசமாகவும், சுகாதாரக் கேடாகவும் இருந்ததாக விடுதலையான ராமேஸ்வரம் மீனவர் வேதனை தெரிவித்தார்.
மார்ச் 16ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற சூசை என்பவரது படகை சிறைபிடித்து 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். 30 நாட்களுக்கு பின் 11 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்,
மீனவர் அந்தோணி 55, இரண்டாவது தடவையாக கைதானதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. 8 மாதங்கள் தொடர்ந்து சிறையில் இருந்ததால் நல்லெண்ண அடிப்படையில் அந்தோணி விடுவிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் கொழும்பில் இருந்து விமான மூலம் சென்னை வந்திறங்கினார். பின் ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிகள் மீனவரை அழைத்துக் கொண்டு தங்கச்சிமடம் வந்தனர்.
அந்தோணி கூறுகையில், சிறைக்காவலர்கள் இந்திய கைதிகளை மதிப்பதில்லை. சுகாதாரக்கேடான உணவு, குடிநீர் வழங்கி சித்ரவதை செய்தனர். பல நாட்கள் பட்டினியாக இருந்தேன்.
சிறை வளாகம் சுகாதாரக் கேடாகவும், துர்நாற்றத்துடனும் இருந்தது என்றார்.

