/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சில்வர், பாலிதீன் பேப்பர்களில் உணவு பார்சல்; மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கலந்து ஆபத்து

ADDED : டிச 08, 2024 06:20 AM

பொதுவாக சூடான உணவுப்பொருட்களை தடை செய்யப்பட்ட நெகிழி வகைகளில் வாங்கி பயன்படுத்துவதால் உடல் நலக் குறைபாடு ஏற்படுகிறது. ஏற்கனவே நெகிழி வகைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது.
ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் சில்வர், மெழுகு முலாம் பூசிய பேப்பர்களில் சூடான உணவை வைத்து சாப்பிடுவதால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
பாலிதீன், பிளாஸ்டிக் கப், சில்வர், மெழுகு பேப்பரில் சூடான உணவை வைத்து உண்பவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்களது ரத்த நாளங்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இவை ஒரு கட்டத்தில் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் பாலிதீன் பை, பிளாஸ்டிக் கப்புகளுடன் சில்வர், மெழுகு பேப்பர்களை பறிமுதல் செய்ய உள்ளோம். வாழை இலைகளில் உணவுப்பொருட்களை பார்சல் கட்டித்தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வியாபாரிகள், மக்களிடம்விழிப்புணர்வு ஏற்படுத்தமாவட்டந்தோறும் சிறப்புமுகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உணவகம், பேக்கரி, டீக்கடை உரிமையாளர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு முகாம் நடத்தவுள்ளோம் என ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயகுமார் தெரிவித்தார்.