/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உரிமம், பதிவுச் சான்றிதழ் இன்றி உணவுத் தொழில் புரிவது தண்டனைக்குரியதாகும் உணவு பாதுகாப்புதுறை எச்சரிக்கை
/
உரிமம், பதிவுச் சான்றிதழ் இன்றி உணவுத் தொழில் புரிவது தண்டனைக்குரியதாகும் உணவு பாதுகாப்புதுறை எச்சரிக்கை
உரிமம், பதிவுச் சான்றிதழ் இன்றி உணவுத் தொழில் புரிவது தண்டனைக்குரியதாகும் உணவு பாதுகாப்புதுறை எச்சரிக்கை
உரிமம், பதிவுச் சான்றிதழ் இன்றி உணவுத் தொழில் புரிவது தண்டனைக்குரியதாகும் உணவு பாதுகாப்புதுறை எச்சரிக்கை
ADDED : செப் 07, 2025 02:56 AM
ராமநாதபுரம்: அரசின் உரிமம், பதிவுச் சான்றிதழ் இன்றி ரெஸ்டாரன்ட்கள், ஓட்டல், பேக்கரி, டீக்கடை உள்ளிட்ட உணவுத்தொழில் புரிவது தண்டனைக்குரியதாகும், என ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
உணவுப் பொருட்களைத் தயாரிப்பவர்கள், உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்தாளர்கள், அனைத்து உணவுப் பொருட்களின் விநியோகஸ்தர்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், பேக்கரி இனிப்பகங்கள், டீ கடைகள், ஓட்டல், விடுதிகள், ரெஸ்டாரன்ட்கள்,காய்கனி கடைகள், விற்பனையாளர்கள், ஆவின் பாலகங்கள், மாணவர்களுக்கான அரசு விடுதிகள், ஊட்ட சத்து மையங்கள், மதிய உணவு கூடங்கள், நியாய விலை அங்காடிகள், சூப்பர் மார்க்கெட்கள், தெருவோர வியாபாரிகள், மீன் உள்ளிட்ட அனைத்து இறைச்சிகடைகள், அன்னதானம் நடத்துவோர்கள் மற்றும் உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் வியாபார நிறுவனங்கள் ஆகியோர சட்டத்தின் பிரிவு 31(1)-ன் கீழ் உணவு பாதுகாப்பு உரிமம் எடுத்த பின்னர் தான் தொழில் தொடங்க வேண்டும்.
ஒருவேளை, உணவு வணிகரது ஆண்டு விற்றுக் கொள்முதல் ரூ.12 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவ்வணிகர்கள் பதிவுச் சான்றிதழ் எடுத்த பின்னர் தான் தொழில் தொடங்க வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழை, https.//foscos.fssai.gov.in என்ற இணையத்தளத்தில் மட்டுமே விண்ணப்பித்து இணையத்தளம் மூலமே பெற்றுக்கொள்ள வேண்டும்.
கட்டணம் மற்றும் இதர விபரங்கள் மேற்கூறிய இணையத்தளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு உரிமம், பதிவுச்சான்றிதழ் பெறாமல் உணவு சார்ந்த தொழில் புரிவது தண்டனைக்குரியதாகும்.
எனவே, இவ்வறிவிப்பு பிரசுரிக்கப்பட்ட 21 தினங்களுக்குள், அனைத்து உணவு வணிகர்களும் தங்களது விற்றுக்கொள்முதலுக்கு ஏற்றவாறு, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை மேற்கூறிய இணையத்தளம் மூலம் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் உணவு வணிகர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பாதுகாப்பு குறித்தான புகார்களுக்கு: 04567--292 770, மாநிலவாட்ஸ்ஆப் புகார் எண்: 94440 42322 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.