/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாய்கள் கடித்த புள்ளிமானை மீட்ட மக்கள் அக்கறை காட்டாமல் வனத்துறை அலட்சியம்
/
நாய்கள் கடித்த புள்ளிமானை மீட்ட மக்கள் அக்கறை காட்டாமல் வனத்துறை அலட்சியம்
நாய்கள் கடித்த புள்ளிமானை மீட்ட மக்கள் அக்கறை காட்டாமல் வனத்துறை அலட்சியம்
நாய்கள் கடித்த புள்ளிமானை மீட்ட மக்கள் அக்கறை காட்டாமல் வனத்துறை அலட்சியம்
ADDED : ஏப் 16, 2025 10:36 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கீழ மண்குண்டு பகுதியில் தெரு நாய்களால் கடித்து காயப்படுத்தப்பட்ட புள்ளி மானை பொதுமக்கள் மீட்ட நிலையில் மானை பாதுகாப்பதில் வனத்துறையினர் அக்கறை காட்டவில்லை.
கீழமண்குண்டு பகுதியில் நேற்று காலை தண்ணீர் தேடி வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் கர்ப்பமுற்ற புள்ளி மான் வந்தது. இந்த மானை தெரு நாய்கள் கடித்து காயப்படுத்தின. நாய்களிடமிருந்து மீட்கப்பட்ட மான் குறித்த தகவல்களை வனத்துறைக்கு காலை 8:00 மணிக்கு பொதுமக்கள் தெரிவித்தனர்.
வனத்துறைக்காக மதியம் 12:00 மணி வரை காத்திருந்த பின் வனத்துறையிலிருந்து ஒருவர் மட்டும் வந்தார். அவரும் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என கிராம மக்கள் கூறிய போதும் தேவையில்லை காட்டிற்குள் கொண்டு விட்டுவிடலாம் என்றார்.
அதனை காட்டிற்குள் கொண்டு செல்வதற்கு வாகனம் இல்லாததால் கீழமண்குண்டு கிராமத்தை சேர்ந்த கோபிராஜன் தனது சொந்த செலவில் வாகனம் ஏற்பாடு செய்து மானுக்கு முதலுதவி செய்யாமல் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பகுதியில் கொண்டு விட்டனர்.
இது போன்ற நேரங்களில் வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு மக்கள் மீட்ட மானுக்கு முதலுதவி சிகிச்சைக்காக கால்நடைத்துறை டாக்டரை அழைக்கவில்லை. கால்நடைத்துறையில் கால் நடைகளை பாதுகாக்க மொபைல் வாகனம்உள்ளது. இதனை வனத்துறையினர் நாடியிருந்தால் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்திருக்க முடியும்.
ஆர்.எஸ்.மங்கலம் வனத்துறையில் இருந்து வந்த செட்டி பாபு என்ற வன ஊழியர் மதியம் 12:00 மணிக்கு மேல் கால்நடை டாக்டர்கள் இருக்க மாட்டார்கள் என தெரிவித்து விட்டார்.அக்கறை இல்லாமல் வனத்துறையினர் நடந்து கொண்டால் வன உயிரினங்களை காப்பது எப்படி.
கோபிராஜன் கூறுகையில், காலை 8:00 மணிக்கு மானை நாய்களிடமிருந்து மீட்டு அதற்கு பாதுகாப்பு வழங்கி வந்தோம். மதியம் 12:00 மணி வரை வனத்துறையினர் வரவில்லை. அதன் பின்பு வந்தவர் மானை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது சொந்த செலவில் வாகனம் ஏற்பாடு செய்து ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பகுதியில் உள்ள வனப்பகுதியில் காயங்களுடன் மானை விட்டு வந்தோம் என்றார்.