/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏழு சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு உருவாக்கம்
/
ஏழு சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு உருவாக்கம்
ADDED : ஜூன் 27, 2025 11:33 PM
பெருநாழி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் சமீபத்தில் திண்டுக்கல்லில் நடந்தது. கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஏழு சங்கங்கள் இணைந்த ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு கூட்டம் குறித்து ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தலைவர் பெருநாழியை சேர்ந்த முருகன் கூறியதாவது:
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு மாநில நீர்த் தேக்க தொட்டி இயக்குபவர், துாய்மை காவலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கம், ஊரக வளர்ச்சி துறை கணினி உதவியாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம ஊராட்சி சுகாதார உறுப்பினர்கள் சங்கம் உள்ளிட்ட ஏழு சங்கங்கள் ஒருங்கிணைந்து கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இயக்கங்களுக்கும் ஒரு பிரதான கோரிக்கையும், ஒரு துணைக்கோரிக்கையும் வைப்பது என முடிவெடுக்கப்பட்டது. ஆக., 23ல் திருச்சியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் மாநில மாநாடு நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
மாநில மாநாட்டுக்கு முன் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டால் நன்றி அறிவிப்பு மாநாடாக நடத்துவது என்றும், அவ்வாறு இல்லை எனில் மாநில மாநாட்டில் கூட்டு போராட்ட நடவடிக்கைகளை அறிவிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது என்றார்.