/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாள் அனுசரிப்பு
/
முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : டிச 06, 2024 05:22 AM
கீழக்கரை: முன்னாள் முதல்வர் ஜெ., 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கீழக்கரை நகர் அ.தி.மு.க., சார்பில் ஹிந்து பஜாரில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கீழக்கரை நகர் செயலாளர் ஜாகுபர் ஹுசேன் தலைமை வகித்தார்.
அவைத் தலைவர் சரவண பாலாஜி முன்னிலை வகித்தார். துணை செயலாளர் குமரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர் செல்வகணேச பிரபு, பொருளாளர் அரி நாராயணன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் வேலன், நகர் வார்டு செயலாளர்கள் நவாப் கான், பாரூக் நுாருல் அமீன், வினோத்குமார், சிவராமலிங்கம் உட்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.
* ஏர்வாடியில் நடந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க., சாயல்குடி ஒன்றிய அவைத்தலைவர் செய்யது அகமது தலைமை வகித்தார். ஏர்வாடி கிளை செயலாளர் அஜ்முல் ரகுமான் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் மலைராஜ், செயலாளர் லெவ்வை கனி, முருகேசன், ஐ.டி., விங் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.