தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் வழக்கில் முன்னாள் டி.எஸ்.பி., சாட்சியம்

 பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் வழக்கில் முன்னாள் டி.எஸ்.பி., சாட்சியம்

 பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் வழக்கில் முன்னாள் டி.எஸ்.பி., சாட்சியம்


ADDED : டிச 20, 2025 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2025 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராணுவ ரகசியங்களை திருட பயங்கரவாதிகளுக்கு உதவியாக இருந்தவர்கள் மீதான வழக்கை விசாரித்த முன்னாள் டி.எஸ்.பி., ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் சித்தி சுலைஹா 52.இவரது சகோதரி கணவர் மலேசிய குடியுரிமை பெற்ற அப்துல்ரஷீத் 58, அங்கு ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் வேலை பார்த்த இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த முகமது யாசீர் 40, அவரது மனைவி பாரிகா ரிஸ்மியா 35, ஆகியோர் சித்தி சுலைஹா வீட்டில் 2015 முதல் 2021 வரை தங்கி இருந்தனர்.

அப்போது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சிம்கார்டுகளை பெற்றுள்ளனர். சிம்கார்டுகளை பாகிஸ்தான் நபரான ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புள்ள முகமது மிப்லால் மவுலவியிடம் முகமது யாசீர் கொடுத்துள்ளார்.

அதை பயன்படுத்தி முகமது மிப்லால் மவுலவி மால்வேர் அட்டாக் மூலம் ராணுவ ரகசியங்களை திருடியுள்ளார்.

கியூ பிரிவு போலீசார் 2021ல் முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல்ரஷீத், சித்தி சுலைஹா, முகமது மிப்லால் மவுலவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் முகமது மிப்லால் மவுலவி தவிர 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்குரைஞர் கார்த்திகேயன் ஆஜரானார். வழக்கை விசாரித்த முன்னாள் டி.எஸ்.பி., பாண்டி ஆஜராகி விசாரணை விபரங்கள் குறித்து சாட்சியம் அளித்தார். விசாரணை ஜன.,5 க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us