sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கார்களில் பதவி பெயர் பலகையை அகற்ற மனமில்லாத முன்னாள் மக்கள் பிரதிநிதிகள்

/

கார்களில் பதவி பெயர் பலகையை அகற்ற மனமில்லாத முன்னாள் மக்கள் பிரதிநிதிகள்

கார்களில் பதவி பெயர் பலகையை அகற்ற மனமில்லாத முன்னாள் மக்கள் பிரதிநிதிகள்

கார்களில் பதவி பெயர் பலகையை அகற்ற மனமில்லாத முன்னாள் மக்கள் பிரதிநிதிகள்


ADDED : ஜன 10, 2025 04:44 AM

Google News

ADDED : ஜன 10, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கல்: கடந்த 2020 ஜன.6ல் பதவியேற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான யூனியன் சேர்மன், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்களுக்கு முழுவதுமாக ஐந்தாண்டு காலம் பதவி நிறைவு பெற்றுள்ள நிலையில் கார்களில் பெயர் பலகையை மட்டும் அகற்ற மனமில்லாமல் தொடர்ந்து வைத்துள்ளனர்.

ஜன.5க்குள் அரசு வாகனங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக வகித்த பதவிகள் குறித்த அனைத்து தளவாட பொருட்கள், இருப்பு நிலை பதிவேடுகள் முழுவதுமாக சம்பந்தப்பட்ட யூனியன் அலுவலங்களில் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.

தற்சமயம் தனி அலுவலர்கள் மூலம் நிர்வாகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்புல்லாணி மற்றும் கடலாடி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் தங்களின் சொந்த வாகனங்களில் முன்பு வகித்த பதவியை பெரிதாக நேம் போர்டாக வைத்து சுற்றும் செயல் பல இடங்களில் அரங்கேறி வருகிறது.

இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், பொதுவாக உள்ளாட்சி அமைப்புகளில் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்த பிறகு அவர்களின் சொந்த வாகனங்களில் பெரும்பாலானோர் எக்ஸ் எனப்படும் முன்னாள் என பெயர் பலகை போட்டுக் கொண்டு சுற்றுவது வாடிக்கை.

தற்போது அதற்கும் ஒரு படி மேலே போய் தங்களது சொந்த வாகனத்தில் பெயர் பலகையை அகற்றாமல் பல இடங்களில் சுற்றி வருவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது.

எனவே உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்தும் வாசகங்கள் அடங்கிய விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us