/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் இல்ல விழா
/
முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் இல்ல விழா
ADDED : மே 23, 2025 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், தி.மு.க., மாவட்ட பிரதிநிதியுமான கந்தசாமி இல்ல காதணி விழா ஆர்.எஸ்.மங்கலம் பசரியா சித்திக் மஹாலில் நடைபெற்றது.
ராமநாதன், சண்முகப் பிரியா தம்பதியினரின் மகன்கள் ஹரிஹரன், வர்ஷன் ஆகியோருக்கு காதணி நிகழ்வு நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம், ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் மோகன், நகர் செயலாளர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினர்.