/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் பாலத்தில் டிராக்டரில் மீன் கொண்டு செல்வதால் துர்நாற்றம்
/
பாம்பன் பாலத்தில் டிராக்டரில் மீன் கொண்டு செல்வதால் துர்நாற்றம்
பாம்பன் பாலத்தில் டிராக்டரில் மீன் கொண்டு செல்வதால் துர்நாற்றம்
பாம்பன் பாலத்தில் டிராக்டரில் மீன் கொண்டு செல்வதால் துர்நாற்றம்
ADDED : ஆக 30, 2025 11:38 PM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய மீன்களை திறந்த வெளி டிராக்டரில் எடுத்துச் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது.
பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் காரல், சூடை உள்ளிட்ட சிறியரக மீன்கள் அதிகம் சிக்கும். இதனை ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி கருவாடு வியாபாரிகள் கிலோ ரூ.15 முதல் 20க்கு வாங்குவார்கள். இதனை காய வைத்து கருவாடாக்கி மூடையாக பார்சல் செய்து லாரியில் நாமக்கல், கரூர் பகுதியில் உள்ள கோழி பண்ணைகளுக்கு அனுப்புவார்கள். அங்கு இதனை இயந்திரத்தில் பவுடராக அரைத்து கோழிகளுக்கு தீவனமாக வழங்குவார்கள்.
இந்நிலையில் இந்த மீன்களை பாம்பன் கடற்கரையில் இருந்து வியாபாரிகள் ராமேஸ்வரம், மண்டபத்திற்கு திறந்தவெளி டிராக்டரில் ஏற்றிக் கொண்டு ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக செல்கின்றனர். அப்போது மீன் கழிவுநீர் சாலையில் வடிவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அருவருப்புடன் செல்கின்றனர். எனவே இந்த மீன்களை மூடிய கன்டெய்னர் லாரியில் எடுத்துச் செல்ல மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.

