ADDED : செப் 18, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பின்புறம் மேற்கு கோபுர வாசல் அருகே புதியதாக திருமண மஹால் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது.
அரசு நிதி ரூ. 2.25 கோடியில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய திருமண மகாலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் எம்.எல்.ஏ., காதர் பாட்ஷா தலைமை வகித்தார். திவான் பழனிவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். யூனியன் முன்னாள் சேர்மன் புல்லாணி, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார், ஒன்றிய பிரதிநிதி செல்லம், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.