ADDED : பிப் 15, 2026 05:01 AM
அ நிறம் | அளவு
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பனைக்குளத்தில், இறந்தவர்களை அடக்கம் செய்யும் மையவாடி பகுதியில், தொழுகை நடத்துவதற்கான புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
ஜும்மா பள்ளி தலைமை இமாம் காஜாமைதீன், ஆலிம் நிஜாமி ஆகியோர் துவா ஓதினர். நிகழ்வில், முஸ்லிம் பரிபாலன சபைத் தலைவர் அப்துல் வகாப், உதவி தலைவர் சிராஜுதீன், செயலாளர் பலில் அகமது, முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் கரீம் கனி, செயலாளர் ரசீது அலி பங்கேற்றனர்.
