நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பனைக்குளத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் அப்துல் வகாப், முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹரீம் கனி ஆகியோர் தலைமை வகித்தனர்.
தலைமை இமாம் ஹாஜா முகைதீன் துவா ஓதினார்.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அலோசியா ஷோபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

