தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வாலிபர் கொலையில் நால்வர் சரண்

 வாலிபர் கொலையில் நால்வர் சரண்

 வாலிபர் கொலையில் நால்வர் சரண்


ADDED : பிப் 12, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: வாலிபரை காரில் கடத்தி அடித்துக் கொலை செய்து கடற்கரையில் வீசிய வழக்கில் தலை மறைவாக இருந்த நால்வர் ராமநாதபுரம் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.

ராமநாதபுரம் கான்சாகிப் தெருவை சேர்ந்தவர் கமால் முஸ்தபா மகன் செய்யது அப்துல்லா 31. இவரை 2025 மே 17ல் சிலர் காரில் கடத்திச் சென்று மண்டபம் அருகே உள்ள மரைக்காயர்பட்டினத்தில் உள்ள வீட்டில் வைத்து அடித்துக் கொலை செய்தனர். தினைக்குளம் நாடார் குடியிருப்பு கடற்கரையில் உடலை வீசினர்.

இவ்வழக்கில் 5 பேர் கைதான நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றியது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 6 பேரில் இருவர் டிச.,ல் சரணடைந்தனர். தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளனர்.

இவ்வழக்கில் நைனா முகம்மது 30, முகம்மது ஷேக் அப்துல்லா 28, முகம்மது காசிம் 24, முகம்மது ஜாவீத் 25, ஆகியோர் நேற்று ராம நாதபுரம் நடுவர் நீதி மன்றம் 2ல் சர ணடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us