/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பக்தர்களை குறிவைத்து ராமேஸ்வரத்தில் பழைய சேலை விற்கும் மோசடி கும்பல்
/
பக்தர்களை குறிவைத்து ராமேஸ்வரத்தில் பழைய சேலை விற்கும் மோசடி கும்பல்
பக்தர்களை குறிவைத்து ராமேஸ்வரத்தில் பழைய சேலை விற்கும் மோசடி கும்பல்
பக்தர்களை குறிவைத்து ராமேஸ்வரத்தில் பழைய சேலை விற்கும் மோசடி கும்பல்
ADDED : டிச 19, 2025 05:15 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பக்தர்களை குறிவைத்து பழைய சேலைகளை விற்று மோசடி செய்யும் கும்பலால் புனித நகருக்கு களங்கம் ஏற்படுகிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர்.
பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் போது சாலை ஓரத்தில் வியாபாரிகள் விற்கும் ஏதேனும் பொருள்களை வாங்கி செல்கின்றனர். இதில் வீடுகளில் பெண்கள் பயன்படுத்தாத, கிழிந்து துாக்கி வீசும் நிலையில் உள்ள சேலைகளை வியாபாரிகள் வாங்கி சலவை செய்து மறுசுழற்சியாக புதிய சேலை போல் வடிவமைத்து விற்கின்றனர்.
இந்த சேலைகளை ராமேஸ்வரம் கோயில் நான்கு ரதவீதி, மேலத்தெரு, பஸ் ஸ்டாண்டில் சாலையில் ஆக்கிரமித்து தற்காலிக கடை அமைத்துள்ள வியாபாரிகள், பக்தர்களை குறிவைத்து விற்று மோசடி செய்கின்றனர்.
இதுகுறித்து இந்திய கம்யூ., ராமேஸ்வரம் நகர் செயலாளர் செந்தில்வேல் கூறுகையில், ஆக்கிரமிப்பு வியாபாரிகள் பழைய சேலைகளை புது சேலை போல் வடிவமைத்து ரூ. 100, 200க்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளிடம் ஏமாற்றி விற்கின்றனர்.
இதனால் புனித நகருக்கு களங்கம் ஏற்படுவதுடன், பாரம்பரியமான உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பக்தர்களை ஏமாற்றி பழைய சேலை, துணிகளை விற்கும் கும்பலை அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

