ADDED : பிப் 24, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் டி.டி. விநாயகர் தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஸ்ரீவேதா அறக்கட்டளை இணைந்து நடத்தினர்.
கண் நோய்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் பரிசோதனைகள் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை தேவைப்படும் 45 பேரை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உள்ளனர். ஏற்பாடுகளை ஸ்ரீவேதா அறக்கட்டளை நிறுவனர் வீரமூர்த்தி செய்திருந்தார்.
