/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பனில் இலவச கண் சிகிச்சை முகாம்
/
பாம்பனில் இலவச கண் சிகிச்சை முகாம்
ADDED : பிப் 16, 2025 06:40 AM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பனில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
பாம்பன் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பார்வை இழப்பு சங்கம் மற்றும் கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து பாம்பனில் கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.
இம்முகாமில் 74 பேர் கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.
இதில் 9 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்காக சங்கரா மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்கப்பட்டது.
கண் சிகிச்சை மருத்துவர் சுவாதி உள்ளிட்ட 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர்.
முகாமில் பாம்பன் ஜமாத் தலைவர் ஹபிபுல்லா, ராமேஸ்வரம் டி.எஸ்.பி., சாந்தமூர்த்தி, தங்கச்சிமடம் சுகாதார ஆய்வாளர் வைரவன், ஜமாத் செயலாளர் அப்துல்காதர், நிர்வாகிகள் ஹலிபுல்லா, முகமது சம்சுல் குதா, சுலைமான் உட்பட பலர் பங்கேற்றனர்.