தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இலவச தீயணைப்பு பயிற்சி

 இலவச தீயணைப்பு பயிற்சி

 இலவச தீயணைப்பு பயிற்சி


ADDED : பிப் 07, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்புத் துறை நிலையத்தில் பிப்.,9 முதல் தனியார் துறை காவலாளிகளுக்கு இலவச அடிப்படை தீயணைப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தீயணைப்பு- மீட்புப்பணி மாவட்ட அலுவலர் ஏழுமலை கூறியதாவது: தனியார் பாதுகாப்பு காவலாளிகளுக்கு இலவசமாக தீயணைப்பு அடிப்படை பயிற்சி பிப்.9 ல் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நிலைய அலுவலர்கள் தினமும் காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். பணிபுரியும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் தீ பாதுகாப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது, பொதுமக்களை எப்படி பாதுகாப்பாக மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

இதில் கலந்து கொள்ள விரும்புவோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தை அணுகலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us