நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் -75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, முதுகுளத்துாரில் முஸ்லிம் வியாபாரிகள் நலச்சங்கம், தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை, லெட்சுமணா சிறப்பு மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
தலைவர் முகமது இக்பால் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் ஷாஜகான், டி.எஸ்.பி. சின்னகண்ணு, தாசில்தார் சடையாண்டி, டாக்டர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, முழு உடல் பரிசோதனை செய்து டாக்டர் ரோஷினி ஆலோசனை வழங்கினார்.
நிறுவனர் முகமதுஅலி ஜின்னா, கல்விக்குழு தலைவர் செய்யது மூமின், தாளாளர் சாகுல்ஹமீது, வியாபாரிகள் நல சங்கத்தினர் பங்கேற்றனர்.