UPDATED : ஆக 20, 2026 07:43 PM
ADDED : ஆக 20, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் பெண்களுக்கான இலவசமாக தையல் பயிற்சி 30 நாட்கள் வழங்கப்பட உள்ளது. தினமும் காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். கிராமம், ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 19 முதல் 50 வயதுள்ள பெண்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் (ஆக.,21) 88259 54443, 80567 71986 ஆகிய அலைபேசி எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும் என இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
