/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடை கால இலவச கலைப்பயிற்சி முகாம்
/
கோடை கால இலவச கலைப்பயிற்சி முகாம்
ADDED : ஏப் 28, 2025 05:30 AM
ராமநாதபுரம்: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மதுரை கலை பண்பாட்டு மையம் சார்பில் இலவச கோடை கால கலைப்பயிற்சி முகாம் ராமநாதபுரத்தில் நடைபெற உள்ளது.
மதுரை கலை பண்பாட்டு மையத்தின் உதவி இயக்குநர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி ராமநாதபுரம் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பாக இலவச கோடை கால கலைப்பயிற்சி முகாம் நடக்கவுள்ளது. ராமநாதபுரம் வெளிப்பட்டணம் டி.டி.விநாயகர் தொடக்கப்பள்ளியில் 6 முதல் 16 வயதுடைய மாணவர்கள் கோடை காலத்தை பயனுள்ளதாக செலவிடும் பொருட்டு கோடை கால இலவச கலைப்பயிற்சி முகாம் மே 1 முதல் 20 ம் தேதி வரை மாலை 4:00 முதல் 6:00 மணி வரை நடக்கவுள்ளது.
பரதநாட்டியம், ஓவியம், குரலிசை (வாய்பாட்டு), சிலம்பம், என நான்கு கலைகள் கற்றுக்கொடுக்கப்படும். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் லோகசுப்பிரமணியனை 98425 67308 என்ற அலை பேசியில் தொடர்பு கொள்ளலாம்.