/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை முதல் குரூப்-2, 2ஏ போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி

ADDED : ஜூலை 22, 2025 03:39 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஜூலை 23) முதல் குரூப்-2, 2ஏ போட்டி தேர்விற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்-2, 2ஏ தேர்விற்கான அறிவிப்பு ஜூலை 15ல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குரூப்- 2ல் 50 காலி பணியிடங்களும், குரூப் -2 ஏ வில் 595 காலிப் பணியிடங்களும் அடங்கும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக., 13.
தற்போது செப்., 28ல் நடைபெறவுள்ள முதல்நிலை தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஜூலை 23) முதல் வார நாட்களில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆர்வமும், விருப்பமும் உள்ள போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது புகைப்படம் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்த விபரங்களுடன் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது 04567--230 160 என்ற தொலைபேசியிலோ அல்லது 73394 06320 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யலாம்.