/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி
/
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி
ADDED : ஏப் 26, 2025 04:14 AM
ராமநாதபுரம் : மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் எஸ்.ஐ., தேர்விற்கான இலவச பயிற்சி முகாம் ஏப்.30 முதல் துவங்க உள்ளது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் காலியாக உள்ள 1299 எஸ்.ஐ., பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 20 முதல் பொதுப்போட்டியினருக்கு 30, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 வயது இருக்க வேண்டும்.
பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினர், திருநங்கைகளுக்கு 35 வயதும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயதும், முன்னாள் படைவீரர்களுக்கு 47 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இத்தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக மே 3க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான தேர்வுகட்டணம் ரூ.500 ஆகும். இப்போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வல்லுநர்களைக் கொண்டு ஏப்.,30 முதல் துவங்கப்படவுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரிலோ அல்லது 04567--230 160 என்ற தொலை பேசி எண்ணிலோ அல்லது 73394 06320 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

