/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை விடுவிப்பு
/
மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை விடுவிப்பு
ADDED : பிப் 04, 2024 05:52 AM

தொண்டி : தொண்டி கடலில் மீனவர்கள் மீன்பிடித்த போது வலையில் சிக்கிய ஆமையை மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.
தொண்டி மகாசக்திபுரத்தை சேர்ந்தவர்கள் வேலுச்சாமி 56, ராஜ்குமார் 28. இருவரும் நேற்று முன்தினம் நாட்டுப்படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களின் வலையில் ஆமை சிக்கியது. அந்த ஆமையை வலையிலிருந்து விடுவித்த மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டனர்.
தொண்டி மரைன் போலீசார் கூறியதாவது:
ஆமையை கடலில் உயிருடன் விட்ட மீனவர்கள் வேலுச்சாமி, ராஜ்குமாருக்கு ஊக்கத் தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
கடல் வாழ் உயிரின பாதுகாப்பு சட்டப்படி மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடல் பசு, அரிய வகை ஆமை சிக்கினால் அதனை அப்படியே மீண்டும் கடலில் விட்டுவிட வேண்டும்.
இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோவை அதற்கான இணையவழி செயலியில் புதிவு செய்தால் சம்பந்தபட்ட மீனவருக்கு ஊக்கப்பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இது குறித்து மீனவ கிராமங்களிலும் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இருந்த போதும் அனைத்து மீனவர்களுக்கும் அரசின் இத் திட்டம் குறித்து முழுமையாக தெரியவில்லை. ஆகவே இனிவரும் காலங்களில் வலையில் தடை செய்யபட்ட உயிரினங்கள் சிக்கினால் உடனே விடுவித்து அதற்கான ஊக்கத்தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.