/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வராகி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை அபிஷேகம்
/
பரமக்குடி வராகி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை அபிஷேகம்
ADDED : நவ 30, 2024 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி; பரமக்குடி சத்தேழு கன்னிமார் கோயிலில் உள்ள வராகி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை வார அபிஷேகம் நடந்தது.
பரமக்குடி அனுமார் கோயில் பின்புறம் உள்ள இக்கோயிலில் வராகி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், பால் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடக்கிறது.
தொடர்ந்து நேற்று காலை அபிஷேகம் நிறைவடைந்து அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டார். பின்னர் தீபாராதனைகள் நிறைவடைந்து பக்தர்களுக்கு மஞ்சள் மற்றும் குங்கும பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பெண்கள் பலரும் மஞ்சள் அரைத்துக் கொடுத்து அம்மனை வழிபட்டனர்.