/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரண்டு ஆண்டுகளாகியும் மகப்பேறு நிதியுதவி கிடைக்காததால் ஏமாற்றம்
/
இரண்டு ஆண்டுகளாகியும் மகப்பேறு நிதியுதவி கிடைக்காததால் ஏமாற்றம்
இரண்டு ஆண்டுகளாகியும் மகப்பேறு நிதியுதவி கிடைக்காததால் ஏமாற்றம்
இரண்டு ஆண்டுகளாகியும் மகப்பேறு நிதியுதவி கிடைக்காததால் ஏமாற்றம்
ADDED : மார் 13, 2024 12:41 AM
திருவாடானை, - திருவாடானை தாலுகாவில் மகப்பேறு நிதியுதவி இரண்டு ஆண்டுகளாகியும் கிடைக்காததால் பெண்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 உதவித் தொகை வழங்கபடுகிறது. இந்த நிதி இரண்டு ஆண்டுகளாக கிடைக்கவில்லை என பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவாடானை பகுதி பெண்கள் கூறியதாவது:
குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.
பரிசோதனை முதல் பிரசவம் வரை அரசு மருத்துவமனைகளில் தான் பார்த்தோம். அதே போல் குழந்தைகளுக்கான தடுப்பூசியும் அரசு மருத்துவமனையில் தான் செலுத்தப்படுகிறது.
நிறைய பேருக்கு இன்னும் நிதியுதவி கிடைக்கவில்லை.
செவிலியர்களிடம் கேட்டால் ஆவணங்களைப் பார்த்து சொல்கிறோம் என்று சரியான காரணங்களைக் கூறாமல் தட்டிக் கழிக்கின்றனர்.
இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களுக்கு ஒரு பெட்டகம் மட்டுமே வழங்கப்பட்டது.
கிராமப்புற ஏழை கர்ப்பிணிகள் பயன்பெறும் இத்திட்டத்தை முறையாக முழுமையாக சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வட்டார மருத்துவ அலுவலர்கள் கூறுகையில், மாநில அரசால் ஒதுக்கப்பட்ட நிதி வழங்கப்பட்டு விட்டது. மத்திய அரசு நிதி ஒதுக்கப்பட்டவுடன் விரைவில் வழங்கப்படும் என்றனர்.

