தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கொலை வழக்கில் தலைமறைவான கூலிப்படையை சேர்ந்தவர் கைது 

 கொலை வழக்கில் தலைமறைவான கூலிப்படையை சேர்ந்தவர் கைது 

 கொலை வழக்கில் தலைமறைவான கூலிப்படையை சேர்ந்தவர் கைது 


ADDED : பிப் 28, 2026 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 07:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

​திருவாடானை: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கிராமத் தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த மதுரையை சேர்ந்த கூலிப்படையை சேர்ந்தவனை போலீசார் கைதுசெய்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே குயவனநேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம் 65. அந்த கிராமத்தின் தலைவரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு கண்ணன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

காசிலிங்கம் தனது சொத்தில் ஒரு பகுதியை மகளுக்கு எழுதி வைத்து உள்ளார். இதனால் ஆத்திர மடைந்த மகன் கண்ணன், சொத்து முழுவதையும் தனக்கே எழுதி வைக்க வேண்டும் என தந்தை யிடம் வற்புறுத்தி வந்து உள்ளார்.

இதற்கு காசிலிங்கம் உடன்படாததால், தந்தை என்றும் பாராமல் அவரைத் தீர்த்துக்கட்ட கண்ணன் முடிவு செய்தார். கடந்த ஏப்., 27ல் ரியல் எஸ்டேட்டுக்கு இடம் பார்க்க காசிலிங்கத்தை வரச்சொல்லிய மர்ம நபர்கள் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் காசிலிங்கத்தை படுகொலை செய்தனர். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மகன் கண்ணன் தனது நண்பர்கள் மற்றும் கூலிப்படையை ஏவி தந்தையைக் கொலை செய்தது அம்பலமானது.​இந்த வழக்கில் ஏற்கனவே கண்ணன் 40, விருதுநகர் அழகு ஞானகுரு 35, மதுரை அலங்கநல்லுார் ராம்குமார் 40, பெருங்குடி வேல் 30, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர். அனைவரும் ஜாமினில் சென்றனர். ​

இது தொடர்பான வழக்கு திருவாடானை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசா ரணைக்கு ராம்குமார் ஆஜராகாமல் தலைமறைவானார். மூன்று மாதங்களாக தலைமறைவாக இருந்த ராம்குமார், திருப்பூரில் தங்கியிருந்த போது திருப்பாலைக்குடி போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us