UPDATED : மே 01, 2026 09:41 PM
ADDED : மே 01, 2026 09:12 PM
முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் மகாதேவர் கோயிலில் சித்திரை மாத பவுர்ணமி முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. மகாதேவருக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.பின்பு 108 விளக்கு பூஜை நடந்தது. இதே போன்று முதுகுளத்துார் செல்லிஅம்மன் கோயிலில் பக்தர்கள் குழு சார்பில் மூலவரான செல்லிஅம்மனுக்கு மஞ்சள்,பால், திரவிய பொடி உட்பட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
முதுகுளத்துார் திரிபுரசுந்தரி பத்ரகாளியம்மன் சிறப்பு பூஜை நடந்தது. சித்திரங்குடியில் சீலைக்காரி அம்மன் கோயிலில் 108 விளக்கு பூஜை நடந்தது. பின் சீலைக்காரி அம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.
