/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காந்தாரி அம்மன் கோயில் தெருவில் கழிவுநீரால் அவதி
/
காந்தாரி அம்மன் கோயில் தெருவில் கழிவுநீரால் அவதி
ADDED : பிப் 14, 2025 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் ராஜா பள்ளி மைதானம் அருகேயுள்ள காந்தாரி அம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் குளம் போல தேங்குவதால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை சரிவர பராமரிக்கப்படாமல் குழாய் சேதமடைந்தும், அடைப்புகளால் கழிவுநீர் ரோட்டில் தேங்குகிறது. தற்போது ராஜா பள்ளி மைதானம் அருகேயுள்ள காந்தாரி அம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் ஓடி காலி இடத்தில் தேங்கியுள்ளது.
துர்நாற்றம், கொசுத் தொல்லையால் குடியிருப்பவர்கள் சிரமப்படுகின்றனர். பாதாள சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.