/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 11, 2025 10:12 PM

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் கிஷோர் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராமமூர்த்தி பங்கேற்று பேசினார்.
ஒன்றிய செயலாளர் சரவணன், பொதுச்செயலாளர் சிவா, துணைத் தலைவர் கிருஷ்ணன், பாலாஜி உட்பட ஏராளமான ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3 அடி முதல் 9 அடி வரையிலான பல வண்ண நிறத்தில் வேலைப் பாடுகளுடன் கூடிய விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, செயற்கை ரசாயன கலப்பில்லாத விநாயகர் திருமேனிகளை பயன்படுத்தப்படுவது பற்றி கூறப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இங்கிருந்து விநாயகர் சிலை பெறுவதற்கு ஏற்ப முயற்சிகள் மேற்கொள்வது குறித்தும், ஒரு வாரத்திற்கு முன்பாகவே இளைஞர்கள் மற்றும் விநாயகர் கமிட்டி பொறுப்பாளர்கள் அனைவரும் விரதத்தை கடைப்பிடித்து காப்புக்கட்டி கொள்ள வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏராளமான ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.