/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
/
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
ADDED : ஆக 28, 2025 06:12 AM

ரெகுநாதபுரம் :  ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வல்லபை விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. யாகபூஜையுடன், மூலவர் விநாயகருக்கு ு அபிஷேக அலங்கார தீபாராதனைகளும் நடந்தது.  பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.
* உத்தரகோசமங்கை அருகே களக்குடி கிராமத்தில் உள்ள பாலகணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலையில் களக்குடி அய்யனார் கோயிலில் உள்ள ஊருணிக்கு பிள்ளையார் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படுகிறது.
* கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் உள்ள கனவில் வந்த கணேசர் கோயில் மூலவருக்கு  அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கனவில் வந்த கணேசர் கோயில் விழா குழுவினர் செய்தனர்.
இதுபோன்று கோகுலம் நகர் மகாகணபதி கோயிலில் சுவாமிக்கு அபிேஷகம்செய்து, பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு, செரி பழம் உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
* திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் சித்தி விநாயகருக்கு,  பூஜைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர். கொழுக்கட்டை, அவல், பொரிகடலை வைத்து நெய்வேத்தியம் செய்தனர். ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்தனர்.
* சாயல்குடியில் உள்ள பங்களா மேடு நேதாஜி நகரில் செல்வவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இரவில் வள்ளி திருமண நாடகம் மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்டவை நடந்தது. ஏற்பாடுகளை நேதாஜி நகர் இளைஞர் அணியினர் செய்தனர்.

