/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடியில் விநாயகர் சிலை ஊர்வலம் சின்ன ஏர்வாடி கடலில் கரைக்கப்பட்டது

ADDED : ஆக 30, 2025 03:49 AM
கீழக்கரை: ஏர்வாடி தர்கா அருகே உள்ள வெட்டன்மனை செல்வ விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இரண்டு நாட்களும் அன்னதானம் வழங்கப்பட்டு இரவில் கலை நிகழ்ச்சி நடந்தது.
செல்வ விநாயகர் கோயில் அருகே 8 அடி உயரம் கொண்ட பெரிய விநாயகர் சிலை டிராக்டரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நேற்று மாலை டிராக்டரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைக்கு தர்கா அலங்கார நுழைவாயில் அருகே ஏர்வாடி தர்கா நிர்வாகம் சார்பில் மாலை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெட்டன்மனை செல்வ விநாயகர் சதுர்த்தி விழாக்குழு தலைவர் முருகசக்தி மற்றும் பாசில், மவுலீஸ்வரன், மாணிக்கம், சிவாஜி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கல்பார், தெத்தமகன்வாடி, நாச்சம்மபுரம், சின்ன ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சின்ன ஏர்வாடி மன்னார் வளைகுடா கடற்கரையில் நேற்று இரவு 7:00 மணிக்கு கரைக்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இவ்விழாவில் ஏராளமான சுற்றுவட்டார கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க கலந்து கொண்டனர்.