/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
/
கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
ADDED : ஏப் 27, 2025 06:52 AM

ராமநாதபுரம் :   கீழக்கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சாகுல் ஹமீது 46, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கீழக்கரை ஜின்னா தெருவை சேர்ந்தவர் நல்ல இப்ராஹிம் மகன் சாகுல் ஹமீது 46. இவர் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் மீது கஞ்சா விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் இருப்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோனுக்கு சந்தீஷ் எஸ்.பி., பரிந்துரை செய்தார்.
இதையடுத்து சாகுல் ஹமீதை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். சாகுல் ஹமீது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.-----

