/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிக்கல் கண்மாய் கரையோரம் குப்பையால் சுகாதாரக்கேடு
/
சிக்கல் கண்மாய் கரையோரம் குப்பையால் சுகாதாரக்கேடு
ADDED : மார் 05, 2024 04:18 AM
சிக்கல் : -சிக்கல் பெரிய கண்மாய்கரையோரம் பிளாஸ்டிக் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது.
சிக்கல் ஊராட்சியில் தினமும் 3 டன்னுக்கு மேல் குப்பை கழிவுகளை சேகரித்து தினந்தோறும் கண்மாக்கரையோரங்களில் கொட்டி வைத்து அவற்றை தீவைத்து எரிக்கின்றனர்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் சார்பில், ஊராட்சிகளுக்கு மட்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து செயல்படுத்துவதற்கு கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றினை முறையாக பயன்படுத்தாமல் பிளாஸ்டிக் குப்பை கழிவை தொடர்ந்து எரிப்பதால் அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
எனவே சிக்கல் ஊராட்சி நிர்வாகத்தினர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

