/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வண்ணாங்குண்டு கிராமத்தில் ரோட்டோரம் குப்பை தேக்கம்
/
வண்ணாங்குண்டு கிராமத்தில் ரோட்டோரம் குப்பை தேக்கம்
வண்ணாங்குண்டு கிராமத்தில் ரோட்டோரம் குப்பை தேக்கம்
வண்ணாங்குண்டு கிராமத்தில் ரோட்டோரம் குப்பை தேக்கம்
ADDED : அக் 27, 2025 04:14 AM

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு ஊராட்சி கிழக்கு தெரு, முஸ்லிம் தெரு மற்றும் பிரதான சாலையோரங்களில் கடந்த ஒரு வாரமாக அள்ளப்படாத குப்பையால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
வீடுகளில் உள்ள குப்பை கழிவுகளை முறையாக தினந்தோறும் அங்குள்ள துாய்மை பணியாளர்கள் சேமிக்காததால் குப்பை கழிவுகள் குவிந்துள்ளது. அதனுடன் கோழி, ஆடு, மீன் இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகிறது. அப்பகுதியை கடந்து செல்வோர் மூக்கை மூடியபடி செல்லும் அவல நிலை உள்ளது.
எனவே ஊரில் தேவையான இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். உடனுக்குடன் அள்ள வேண்டும். இவ்விஷயத்தில் தனி அலுவலர் உரிய நிதி ஒதுக்கீடு செய்து டிராக்டர் மூலமாக நாள்பட்ட குப்பையை அகற்ற வேண்டும். இதனால் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் உள்ளது என மக்கள் தெரிவித்தனர்.

