/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் பாலத்தில் குப்பை அகற்றம்
/
பாம்பன் பாலத்தில் குப்பை அகற்றம்
ADDED : ஜன 25, 2026 06:19 AM

ராமேஸ்வரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் குவிந்து கிடந்த குப்பையை ஊராட்சி நிர்வாகம் அகற்றியது.
பாம்பன் கடல் மீது அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல் கின்றனர்.
மேலும் பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் நின்ற படி கடல் அழகு, ரயில் பாலம், மன்னார் வளைகுடா தீவுகளை கண்டு ரசிக்கின்றனர்.
இந்நிலையில் பாலத்தில் சுகாதாரம் பராமரிப்பின்றி குப்பை, பாலிதீன் கழிவுகள் குவிந்து கிடந்தது. இதனால் சுகாதாரக் கேடாக மாறியதால் சுற்றுலாப் பயணிகள் அருவருப்பு அடைந்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் ஜன.,23ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பாலத்தில் சுகாதாரம் பராமரிக்க கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தர விட்டார். அதன்படி பாம்பன் ஊராட்சி நிர்வாகம் பாலத்தில் கிடந்த குப்பை, பாலிதீன் கழிவுகளை சேகரித்து சுகாதாரம் பராமரித்தனர்.

