/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வைகை கரையோரத்தில் குப்பைக்கு தீ வைப்பு: மக்கள் அவதி
/
பரமக்குடி வைகை கரையோரத்தில் குப்பைக்கு தீ வைப்பு: மக்கள் அவதி
பரமக்குடி வைகை கரையோரத்தில் குப்பைக்கு தீ வைப்பு: மக்கள் அவதி
பரமக்குடி வைகை கரையோரத்தில் குப்பைக்கு தீ வைப்பு: மக்கள் அவதி
ADDED : மார் 20, 2024 12:18 AM

பரமக்குடி : -பரமக்குடி வைகை ஆற்றின் கரையோரங்களில் குப்பையை கொட்டி, அதனை தீ வைத்து எரிப்பதால் மாணவர்கள், மக்கள் மூச்சு திணறலுக்கு ஆளாகின்றனர்.
பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து அள்ளப்படும் குப்பை ஆங்காங்கே உள்ள கிடங்குகளுக்குகொண்டு செல்லப்படுகிறது.
மேலும் மக்கள் வீடுகளில் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் குப்பையை பிரித்துக் கொடுக்கின்றனர்.
தொடர்ந்து தெருக்களில் அள்ளப்படும் குப்பை நீண்ட தொலைவில் உள்ள குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் வைகை கரையோரங்களில் ஊழியர்கள் கொட்டுகின்றனர்.
அவ்வாறு கொட்டப்படும் குப்பையை அள்ளாமல் தீ வைத்து எரிக்கின்றனர்.
இதனால் காலை, மாலை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் தொடங்கி கரையோரமுள்ள மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மூச்சு திணறலுக்கு ஆளாகின்றனர்.
இந்த நிலை தினம், தினம் தொடர்வதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு தொற்றுக்கு ஆளாகும் சூழல் உள்ளது.
ஆகவே குப்பையை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.