/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் பெயரளவில் குப்பை பிரிக்கும் கூடம் செயல்படவில்லை; பல இடங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது

ADDED : ஜூன் 11, 2025 05:45 AM

கடலாடி: - ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சிகளில் பல இடங்களில் பெயரளவில் மட்டுமே குப்பையை பிரித்தெடுக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அவை செயல்படாத நிலையில் அவ்விடங்களில் கார்கள், மாட்டு வண்டிகளை நிறுத்தி தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் குப்பையை பிரித்தெடுக்கும் கூடம் பல லட்சங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 90 சதவீதத்திற்கும் மேல் தற்போது செயல்படாத நிலையில் தான் உள்ளது. கடலாடி தாலுகா பெரியகுளத்தில் 15வது நிதிக்குழு மானியம் 2020-- 2021 ஆண்டின் படி ரூ.90 ஆயிரத்தில் குப்பையை பிரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் முழுமையாக செயல்பாடின்றி காட்சிப் பொருளாக முடங்கியுள்ளது. இரும்பு தகரத்தாலான கூரைகள் அமைத்து அவற்றில் ஊராட்சியில் இருந்து சேகரிக்க கூடிய மக்கும், மக்காத குப்பை ஆகிவற்றை தரம் பிரித்து மாவட்ட ஊரக வளர்ச்சியின் முகமையின் மூலமாக உரிய வழிகாட்டுதலும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவை பயன்பாடின்றி உள்ளன.
இதே போன்று கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் தகரத்தால் ஆன கூரைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணி மேற்கொண்டுள்ளனர். இவற்றில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவு உள்ளது. அக்கூட்டத்தில் மாட்டு வண்டிகளை நிறுத்தியும், கார்கள் மற்றும் கால்நடைகளை கட்டி வைத்தும் உள்ளனர்.
இதனால் இத்திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாக உள்ளது. அரசின் திட்டங்களை உரிய முறையில் பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் உரிய வழிகாட்டுதலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---