/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கரிமூட்டம் தொழில் மழையால் பாதிப்பு
/
கரிமூட்டம் தொழில் மழையால் பாதிப்பு
ADDED : அக் 21, 2024 04:54 AM

ஆர்.எஸ்.மங்கலம்: மழையால் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கரிமூட்டம் தொழில் பாதிப்படைந்துள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரம் விறகுகளை வெட்டி அதை எடை போட்டு நேரடியாக விறகுகளாகவும், அவைகளை கரிமூட்டம் மூலம் கரிகளாக்கி விற்பனை செய்கின்றனர். விவசாயிகளால் வெட்டப்படும் பெரிய விறகுகளை நேரடியாக விற்பனை செய்து பயனடைகின்றனர்.
சிறிய வகை விறகுகள், மரத்தின் துார் பகுதிகளை மொத்தமாக மூட்டமாக அடிக்கி கரிமூட்டம் போடுகின்றனர்.
இந்நிலையில் கரி மூட்டத்திற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுகள் மழையால் நனைந்துள்ளதால் விறகுகளை கரிகளாக்குவதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான கரி மூட்ட தொழிலாளர்கள் வேலையின்றி பாதிப்படைந்துள்ளனர்.

