/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செப்.27 ல் எரிவாயு குறைதீர் கூட்டம்
/
செப்.27 ல் எரிவாயு குறைதீர் கூட்டம்
ADDED : செப் 24, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் செப்.27ல் மாலை 4:00மணிக்கு சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமையில் எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்கள் பங்கேற்க உள்ளனர். ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, மற்றும் முதுகுளத்துார் பகுதி சமையல் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர், பொதுமக்கள் பங்கேற்று எரிவாயு விநியோகம் தொடர்பான கோரிக்கை, குறைகளை தெரிவிக்கலாம்.