/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கேதார கவுரீஸ்வரி அம்மன் கோயிலில் கவுரி நோன்பு
/
கேதார கவுரீஸ்வரி அம்மன் கோயிலில் கவுரி நோன்பு
ADDED : நவ 02, 2024 08:17 AM

பரமக்குடி : பரமக்குடி கேதார கவுரீஸ்வரி அம்மன் கோயிலில் ஐப்பசி மாத கவுரி நோன்பு விழா நடக்கிறது.
இக்கோயிலில் அக்.31ல் தீபாவளி பண்டிகை சிறப்பு பூஜைகள் நடந்தது.
காலை 10:00 மணிக்கு வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம் துவங்கி மாலை 6:00 மணிக்கு கவுரி நோன்பு உற்ஸவம் துவங்கியது.
அப்போது கவுரி அம்மன் சிவ பூஜை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நேற்று அம்மன் கோலாட்டம் ஆடும் திருக்கோலத்தில் எழுந்தருளினார்.
இன்று(நவ.2) ரிஷப வாகனத்தில் இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதி உலா வருகிறார்.
நாளை அம்மன் ஊஞ்சல் அலங்கார சேவை, மறுநாள் உற்ஸவ சாந்தி விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து கவுரீஸ்வரி அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர்.
அன்று இரவு அம்மன் அனந்த சயனத்தில் திருவீதி உலா வருகிறார்.
ஏற்பாடுகளை தெலுங்கு விஸ்வ பிராமண மகா சபையினர் செய்துள்ளனர்.